Sep 27, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை உஜோங் குறுநிலத் தலைவரின் நீக்கத்தை ஏற்குமாறு மாநில அரசு அறிவுறுத்தல்
தற்போதைய செய்திகள்

சுங்கை உஜோங் குறுநிலத் தலைவரின் நீக்கத்தை ஏற்குமாறு மாநில அரசு அறிவுறுத்தல்

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சுங்கை உஜோங் குறுநிலத் தலைவரான உண்டாங் டத்தோ முபாரக் தோஹாக் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளுமாறு மாநிலத்தின் 'நீதி மற்றும் சட்ட மன்றம்' அறிவுறுத்தியுள்ளது.

மாநிலத்தின் யாங் டி-பெர்துவான் பெசார் தலைமையில் இன்று ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்புக்கூட்ட அமர்வில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் தெரிவித்தார்.

முபாரக் தோஹாக் நீக்கப்பட்டதற்கான 33 காரணங்கள் இந்த அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டன.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 'ஆடாட் பெர்பாத்தே' பாரம்பரிய முறைப்படி, மாநில அரசரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கொண்ட நான்கு முக்கிய குறுநிலத் தலைவர்களில் இவரும் ஒருவர். 1993-ஆம் ஆண்டு முதல் இந்தப் பதவியில் இருந்த இவர், தற்போது மாநில அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் நீக்கப்பட்டுள்ளார்.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்