Jul 1, 2026
Thisaigal NewsYouTube
இ-வாலட் மோசடி: 7 நாட்களில் முழு இழப்பீடு வழங்க பிரதமர் அன்வார் உத்தரவு!
தற்போதைய செய்திகள்

இ-வாலட் மோசடி: 7 நாட்களில் முழு இழப்பீடு வழங்க பிரதமர் அன்வார் உத்தரவு!

Share:

இ-வாலட் நிறுவனங்கள் பேங்க் நெகாரா விதித்துள்ள பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றத் தவறினால், பணமிழந்த வாடிக்கையாளர்களுக்கு 7 நாட்களுக்குள் முழுப் பணத்தையும் திருப்பித் தர வேண்டும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

வாடிக்கையாளர்களின் கவனக்குறைவுகளால் இழப்பு ஏற்பட்டிருந்தாலும் கூட, நிறுவனங்கள் தான் பொறுப்பேற்று 7 நாட்களுக்குள் பணத்தைத் திருப்பித் தர வேண்டும்.

ஆன்லைன் மற்றும் இ-வாலட் மூலமாக நடக்கும் பணத் திருட்டுகளைத் தடுக்க, வங்கிகளுக்கும் இ-வாலட் நிறுவனங்களுக்கும் பேங்க் நெகாரா பல கடுமையான பாதுகாப்பு விதிகளைப் போட்டுள்ளது என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

இதில் கூடுதல் பாதுகாப்பு அங்கீகார முறைகள், அதிக ஆபத்துள்ள பரிவர்த்தனைகளுக்கான காத்திருப்பு காலம் மற்றும் சந்தேகத்திற்கிடமான நேரத்தில் கணக்குகளை உடனடியாக முடக்கும் கில் சுவிட்ச் போன்ற வசதிகள் அடங்கும். இத்தகைய கடுமையான பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் மூலம் கடந்த ஆண்டு மட்டுமே 1.2 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான மோசடிப் பரிவர்த்தனைகள் தடுக்கப்பட்டுள்ளன என்றும் அன்வார் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related News