Jul 10, 2026
Thisaigal NewsYouTube
2027 வரவு செலவு தயாரிப்பு பணிகள் தீவிரம்: மதானி பொருளாதாரக் கொள்கையே அடித்தளம்!
தற்போதைய செய்திகள்

2027 வரவு செலவு தயாரிப்பு பணிகள் தீவிரம்: மதானி பொருளாதாரக் கொள்கையே அடித்தளம்!

Share:

எதிர்வரும் அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிப்பதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் முக்கியத் தரப்பினருடன் கலந்தாலோசிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக இரண்டாம் நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அஜிசான் தெரிவித்துள்ளார்.

புத்ராஜெயாவில் உள்ள எரிபொருள் நிலையத்தில் 'புடி மதானி' டீசல் மானிய அமலாக்கத்தின் முதல் நாள் நிலவரத்தைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த வரவு செலவுத் திட்டம் உருவாக்கத்தில் அரசாங்கம் 'மடானி பொருளாதாரம்'என்ற கொள்கையையே முக்கிய அடித்தளமாகக் கொண்டு செயல்படும் என்று குறிப்பிட்டார்.

மேலும், 13ஆவது மலேசியத் திட்டம், தேசிய ஆற்றல் மாற்ற கால அட்டவணை மற்றும் புதிய தொழில்முறை முதன்மைத் திட்டம் 2030 ஆகியவற்றில் வகுக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் கொள்கைகளின்படியே இந்த வரவு செலவு வடிவமைக்கப்படும் என்றும், நாட்டை 2030ஆம் ஆண்டிற்குள் சிறந்த வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதே இதன் நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்