Sep 23, 2026
Thisaigal NewsYouTube
பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை
தற்போதைய செய்திகள்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

Share:

பணியிடங்களில் துன்புறுத்தல் மற்றும் அடக்குமுறைக்கு ஆளாகும் ஆசிரியர்களுக்கு உதவ, கல்வி அமைச்சு உடனடியாக ஒரு குறிப்பிட்ட பாதுகாப்பு வழிமுறையை உருவாக்க வேண்டும் என்று மலேசிய தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கமான என்யுடிபி தலைவர் அமினுடின் அவாங் வலியுறுத்தியுள்ளார்.

கோலாலம்பூர் கெப்போங்கில் உள்ள ஒரு பள்ளியில், 17 ஆண்டுகள் பணியாற்றி 3 முறை சிறந்த சேவை விருது பெற்ற DG44 தர பெண் ஆசிரியர் ஒருவர், பள்ளி தலைமையாசிரியரின் அடக்குமுறையால் தனது DG48 பதவி உயர்வை இழந்துள்ளதாக சமூக ஊடகங்களில் புகார் எழுந்துள்ளது. இதனால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். மேலும், அதே தலைமையாசிரியரின் கீழ் ஐந்து ஆசிரியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய என்யுடிபி தலைவர் அமினுடின் அவாங், இந்தப் புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில் கல்வி அமைச்சு விரிவான விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது வெறும் புகார் பெறும் தளமாக இல்லாமல், பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு முறையான தீர்வு தரும் அமைப்பாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி - டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்