Oct 15, 2026
Thisaigal NewsYouTube

13.5 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் அம்மாநிலத்திற்கு வருகை தந்துள்ளனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
13.5 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் அம்மாநிலத்திற்கு வருகை தந்துள்ளனர்

டிச. 27-

MELAKAவுக்கு வருகைபுரியும் ஆண்டு 2024 TMM2024 ஐ முன்னிட்டு கடந்த நவம்பர் வரை 13.5 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் அம்மாநிலத்திற்கு வருகை தந்துள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 81.89 விழுக்காடு அதிகமாகும். இந்த தகவலை மலாக்கா மாநில சுற்றுலா, பாரம்பரியம், கலை, பண்டாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் ரசாக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

வருகை தந்தவர்களில் 75.46 விழுக்காடு உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆவர். அவர்கள் பெரும்பாலும் கோலாலம்பூர், சிலாங்கூர், ஜோகூர், நெகிரி செம்பிலான் போன்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். மீதமுள்ள 24.54 விழுக்காட்டினர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆவர். அவர்களில் சீனா, சிங்கப்பூர், இந்தோனேசியா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம்.

TMM2024 இன் மூலம் மாநில அரசுக்கு சுமார் 12.68 பில்லியன் ரிங்கிட் வருவாய் கிடைத்துள்ளது. ஒரு சுற்றுலாப் பயணியின் ஒரு நாள் சராசரி செலவு 544 ரிங்கிட் 66 சென் ஆக கணக்கிடப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் செலவுகளில் தங்குமிடம், போக்குவரத்து, உணவு, ஷாப்பிங், பொழுதுபோக்கு போன்ற பல்வேறு அம்சங்கள் அடங்கும். இந்த தகவல்கள் மலாக்கா சட்டமன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்