Sep 23, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

Share:

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டதுவழித்தட திட்டத்தின் அடுத்த முக்கிய கட்டமாக, ரயில்வே அமைப்பு பணிகளுக்கான 3.028 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஒப்பந்தத்தை எம்.ஆர்.டி நிறுவனம், எம்.ஆர்.சி.பி – தீட்டா எட்ஜ் ஜேவி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் மின்சார ரயில்கள், சிக்னல் மற்றும் ரயில் கட்டுப்பாட்டு அமைப்புகள், மின்விநியோகம், தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தானியங்கி கட்டண வசூல் உள்ளிட்ட ஏழு முக்கிய ரயில்வே அமைப்புகள் நிறுவப்படவுள்ளன.

தற்போது சிலிக்கான் தீவு முதல் கோம்தார் வரையிலான கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும், 45 பைல் கேப்கள், 32 தூண்கள் அமைக்கும் பணிகள் முன்னேறியுள்ளதாகவும் எம்.ஆர்.டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் கோம்தார் முதல் பினாங்கு சென்ட்ரல் வரையிலான சி.எம்.சி 2 ஒப்பந்தமானது இவ்வாண்டு நவம்பரில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி - டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்