Sep 23, 2026
Thisaigal NewsYouTube
கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்
தற்போதைய செய்திகள்

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

Share:

கங்கார்-இல் கடந்த ஜூலை 26-ஆம் தேதி சாக்குமூட்டையில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகில், மேலும் ஒரு சாக்குமூட்டையில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றியுள்ளனர்.

இது குறித்து கங்கார் மாவட்ட போலீஸ் தலைவர் யூஷரிஃயூட்டின் முகமட் யூசோப் கூறுகையில், முதல் இடத்திலிருந்து சுமார் 31.1 மீட்டர் தொலைவில், புதர்களை அகற்றிக் கொண்டிருந்த 61 வயதான ஆண் ஒருவர், இரண்டாவது சாக்குமூட்டையை கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளார்.

அந்த சாக்குமூட்டை மண்ணில் பாதியாக புதைக்கப்பட்டிருந்ததுடன், அதன் அருகே உள்ளாடை, பழைய கிழிந்த கால்சட்டை மற்றும் பெல்ட்டும் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட எலும்புகள் மற்றும் பொருட்கள் சுல்தானா பாஹியா மருத்துவமனையில் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, முதல் மற்றும் இரண்டாவது எலும்புக்கூடு கண்டெடுப்பு வழக்குகளும் குற்றவியல் சட்டம் பிரிவு 302-இன் கீழ் கொலை வழக்காக மறுவகைப்படுத்தப்பட்டுள்ளன.

Related News

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி - டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்