Sep 23, 2026
Thisaigal NewsYouTube
கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு
தற்போதைய செய்திகள்

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

Share:

அலோர் ஸ்டாரில் மாயமானதாக கூறப்பட்ட கணவன், மனைவி மற்றும் அவர்களது 9 வயது மகன் தொடர்பான வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கூட்டு எனப்படும் பணச்சீட்டு மோசடி தொடர்பாக அந்த தம்பதியினர் போலீசில் சரணடைந்துள்ளனர்.

36 மற்றும் 39 வயதுடைய அந்த தம்பதியினர் இன்று அதிகாலை குபாங் பாசு மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் சரணடைந்ததாக அம்மாவட்ட போலீஸ் தலைவர் முகமது ராட்சி அப்துல் ரஹீம்தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு 4 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோசடியில் ஒருவர் 25,000 ரிங்கிட்டை இழந்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார். அதையடுத்து குற்றவியல் சட்டம் பிரிவு 420-ன் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related News

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்