Sep 23, 2026
Thisaigal NewsYouTube
 ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்
தற்போதைய செய்திகள்

ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

Share:

அக்டோபரில் செபாங் அனைத்துலக சுற்றுப்பாதையில் நடைபெறவுள்ள ஃபார்முலா 1 கல்ஃப் ஏர் பஹ்ரைன் கிராண்ட் ப்ரிஸ் 2026 போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ் நிர்வாக இயக்குநர் மைக்கேல் ரோச்-ஐ சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சிங்கப்பூர்-இன் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி, சர்வதேச தரத்தில் போட்டியை நடத்த அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாக அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இந்தப் போட்டி சுற்றுலா, வேலைவாய்ப்பு, முதலீடு மற்றும் விசிட் மலேசியா 2026 இயக்கத்துக்கு பெரும் ஊக்கமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஃபார்முலா 1 பந்தயமானது, மலேசியா–பஹ்ரைன் உடன்படிக்கையின் கீழ் வரும் அக்டோபர் 2 முதல் 4 -ஆம் தேதி வரை செபாங் அனைத்துலக சுற்றுப்பாதையில் நடைபெறவுள்ளது.

மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக, கடந்த ஏப்ரலில் பஹ்ரைன்-இல் நடைபெறவிருந்த இப்போட்டி அக்டோபருக்கு மாற்றப்பட்டது.

கடந்த 1999 முதல் 2017 -ஆம் ஆண்டு வரை மலேசியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியை நடத்திய செபாங் அனைத்துலக சுற்றுப்பாதை, பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஃபார்முலா 1 போட்டியை நடத்துகிறது.

இதன் மூலம் மலேசியா, பிராந்திய அளவில் மோட்டார் பந்தியம் மையமாக தனது நிலையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி - டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்