நாட்டின் தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், 15 ஆயிரம் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் விண்ணப்பங்களை உடனடியாகப் பரிசீலித்து விரைவுபடுத்துமாறு மனிதவள அமைச்சுக்குப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு இந்தத் தகவலை வெளியிட்ட அரசாங்க ஊடகத் தொடர்பாளரும் தொடர்புத்துறை அமைச்சருமான டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்ஸில், சம்பந்தப்பட்ட துறைகளின் தொழிலாளர் தேவைகளைப் பூர்த்தி செய்து, நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு நேரடியாக ஆதரவளிக்கும் நோக்கில் பிரதமர் இந்த விடுக்கோளை விடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
முன்னதாக, கடந்த ஜூலை 24 அன்று இந்திய முஸ்லிம் உணவகத் துறையைப் பாதித்துள்ள வெளிநாட்டுத் தொழிலாளர் பற்றாக்குறைப் பிரச்சினைக்கு ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்குப் பிரதமர் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








