கடந்த ஜுலை மாதம் பத்து பாகாட் ஶ்ரீ காடிங் செம்பனை தோட்டத்தில் 12 வயது சிறுமியை பாலியல் பலத்காரம் செய்த குற்றத்திற்காக எஸ் பி எம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முஹம்மது அம்மார் ஜிக்ரி முகமது இஸ்ராக் மற்றும் முஹம்மது அனாகி லுக்மானுல்ஹகீம் வுடன் 20 வயது முஹம்மது டேனியல் ஹைகல் ஹெல்மி எஃபெரோ மூவார் செஸ்சன் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டனர்.
நீதிமன்றத்தில் நீதிபதி முன் குற்ற அறிக்கை வாசிக்கப்பட்டபோது அம்மூவரும் தங்களின் மீது தவறு இல்லை எனக் கூறி நீதிமன்ற விசாரணையைக் கோரி 8000 வெள்ளி ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.








