Dec 3, 2025
Thisaigal NewsYouTube
வடகிழக்குப் பருவமழையின் தாக்கம் குறைவாக இருக்கும்
தற்போதைய செய்திகள்

வடகிழக்குப் பருவமழையின் தாக்கம் குறைவாக இருக்கும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.16-

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் பிற்பகல் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் வடகிழக்குப் பருவமழையின் தாக்கம், இவ்வாண்டு குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

ஆண்டு இறுதியில் ஏற்படும் இந்த இயற்கைச் சீற்றத்தில் கடந்த ஆண்டுகளில் உயிர்ப் பலி சம்பவங்கள் மற்றும் உடமைகள் சேதம் பெருவாரியாக நிகழ்ந்துளள்ன. எனவே இந்த வடகிழக்கு பருவமழையைச் சாதாரணமாகக் கருதி விட முடியாது என்றாலும் தொடக்கக் கட்ட ஆயத்த நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக இயற்கை சீற்றம் மீதான பேரிடர் மேலாண்மைக் குழுத் தலைவருமான டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் குறிப்பிட்டார்.

தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள், ஆபத்து அவசர வேளைகளில் அவர்களை இடம் மாற்றம் செய்வதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது திட்டமிட்டப்பட்டு வருவதாக அவர் விளக்கினார்.

இன்று கோலாலம்பூரில் ஆசியான் SME Venture நிகழ்வைத் தொடக்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

Related News