கடந்த ஆண்டு தனது மனைவி ஜுமாயினி துவாங்கு புஜாங் காலமானதையடுத்து, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இவ்வாண்டு ஹரி ராயா திறந்த இல்ல நிகழ்ச்சியை நடத்தப்போவதில்லை என சரவாக் மாநில முதல்வர் அபாங் ஜொஹாரி ஓபெங் தெரிவித்துள்ளார்.
தனது குடும்பத்தினர் சார்பில் ஹரி ராயா வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக இன்று தமது ஹரி ராயா வாழ்த்துரையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த ஷவ்வால் மாதத்தில் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் ஆசீர்வாதங்களை பெருகட்டும் என்றும் அபாங் ஜொஹாரி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, ஜூன் 23 ஆம் தேதி, ஜுமாயினி துவாங்கு புஜாங் தனது 76 வயதில் காலமானார்.
அவர் சரவாக் மாநிலத்தின் இரண்டாவது ஆளுநர் துவாங்கு புஜாங் துவாங்கு ஒஸ்மான்-னின் மகளாவார்.








