Sep 28, 2026
Thisaigal NewsYouTube
"எரிபொருள் விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கப்பட வேண்டும்"– ஹம்சா சைனுடின்
தற்போதைய செய்திகள்

"எரிபொருள் விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கப்பட வேண்டும்"– ஹம்சா சைனுடின்

Share:

மேற்காசிய போர் காரணமாக அதிகரித்து வரும் எரிபொருள் விலைகளை நிர்வகிக்கும் அரசாங்கத்தின் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா சைனுடின் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று டீசல் விலை உயர்வு ஏற்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், இது போக்குவரத்து செலவுகளில் தொடர் தாக்கத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என்று கூறினார்.

மேற்காசிய போரால் உலகளாவிய எண்ணெய் விலை உயர்ந்துள்ளது என்பதை மக்கள் அறிந்திருந்தாலும் கூட, அதன் தாக்கம் மலேசிய மக்களுக்கு எவ்வாறு இருக்கும் என்பதை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டியது அவசியம் என்று லாருட் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹம்சா தெரிவித்துள்ளார்.

Related News