Mar 19, 2026
Thisaigal NewsYouTube
குர்ஆனை மித்த வழக்கு: ஆடவருக்கு 9 மாதங்கள் சிறை
தற்போதைய செய்திகள்

குர்ஆனை மித்த வழக்கு: ஆடவருக்கு 9 மாதங்கள் சிறை

Share:

புனித குர்ஆனை மிதித்து அதன் காணொளியை சமூக ஊடகங்களில் பதிவேற்றிய குற்றத்திற்காக 41 வயதான ஆடவருக்கு அலோர் காஜா மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் 9 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

அமீர் அப்துல் மாலிக் என்ற ஆடவர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நீதிபதி தியோ ஷூ யீ இத்தண்டனையை வழங்கியுள்ளார்.

குற்றப்பத்திரிகையின் படி, கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி, மஸ்ஜித் தானா பகுதியில் உள்ள கம்போங் துரியான் டவுன்-இல், இஸ்லாமை அவமதிக்கும் நோக்கில் குர்ஆனை மிதித்து, அதனை காணொளியாகப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக அமீர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கு மத உணர்வுகளை புண்படுத்தும் செயல்களுக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கையை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.

இக்குற்றமானது முஸ்லிம்களின் உணர்வுகளை பாதிப்பதோடு, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கக்கூடிய வகையில் இருப்பதால், இது ஒரு தீவிரமான குற்றம் என்று நீதிபதி தியோ தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Related News