Mar 19, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் சாலை விபத்து: இளம் தம்பதியினர் பலி
தற்போதைய செய்திகள்

ஜோகூர் சாலை விபத்து: இளம் தம்பதியினர் பலி

Share:

ஜொகூர் பாரு – மெர்சிங் சாலையின் 77.3 கிலோமீட்டர் பகுதியில், கோத்தா திங்கி அருகே இன்று காலை இரு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், இளம் தம்பதியினர் உயிரிழந்தனர்.

இன்று காலை சுமார் 9.45 மணியளவில் நிசான் சென்ட்ரா காரும், நான்கு பேர் பயணித்திருந்த புரோட்டான் சாகா காரும் நேருக்கு நேர் மோதியதாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் யுசோப் ஒஸ்மான் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் நிசான் சென்ட்ரா காரை ஓட்டிச் சென்ற 26 வயதான இளைஞரும், அவருடன் பயணித்த 25 வயதான பெண்ணும் உயிரிழந்தனர்.

மெர்சிங்-லிருந்து ஜொகூர் பாரு நோக்கி சென்ற இந்த தம்பதியினர், எதிர்புற வழித்தடத்தில் சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதனால், பாசிர் கூடாங் இருந்து குவாந்தான் நோக்கி பயணித்த புரோட்டான் சாகா காருடன் மோதல் ஏற்பட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

Related News