Oct 2, 2026
Thisaigal NewsYouTube

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கோலாலம்பூர், டிசம்பர்.02-

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பெரும்பாலான பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்ட மாநிலங்கள், அவற்றை சீர்படுத்திக் கொள்வதற்கு 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நாடாளுமன்ற மேலவையில் அறிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை உடனடியாக மதிப்பீடு செய்து, அவற்றைச் சீர்படுத்துமாறு மாநில அரசாங்கங்கள் மற்றும் மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள அனைத்து அரசு இலாகாக்களுக்கும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகள், கிளினிக்குகள், சாலைகள் மற்றும் பொது வசதிகள் ஆகியவற்றைச் சீர்படுத்துவதற்கு தாம் 500 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

இன்று நாடாளுமன்ற மேலவையில் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மசோதா மீதான அறிக்கையை இரண்டாவது வாசிப்பில் நிறைவேற்றியப் பின்னர் உரையாற்றுகையில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →