கோலாலம்பூர், ஆகஸ்ட்.21-
தமது கணவர் முன்னாள் நிதி அமைச்சர் துன் டையிம் ஸைனுடின் மற்றும் குடும்பச் சொத்துக்களை முடக்குவதற்கு, பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணைமான எஸ்பிஆ எம்மின் நடவடிக்கையை எதிர்த்து சவால் விடுவதற்கு அந்த முன்னாள் அமைச்சரின் மனைவி நயிமா காலிட் செய்து கொண்ட விண்ணப்பத்திற்குக் கோலாலபூர் உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
அரசியலமைப்புச் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு நயிமா முன் வைத்துள்ள பல தரப்பட்ட கேள்விகள் தொடர்பில் அவரின் விண்ணப்பம் குறித்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதிப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதி கே. முனியாண்டி தெரிவித்தார்.
நயிமா எட்டு சட்டக் கேள்விகளை முன் வைத்திருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். தங்கள் சொத்துக்களை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது என்பது தொடர்பில் அவர் இந்த வழக்கைத் தொடுத்துள்ளார்.








