அலோர் ஸ்டார், டிசம்பர்.04-
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதைப் போன்று கெடா மாநிலத்தில் பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநில கல்வி இலாகா அறிவித்துள்ளது.
அந்த இரு ஆசிரியர்களுக்கு எதிரான விசாரணை முடியும் வரையில் அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஒழுக்கக்கேடான நடவடிக்கையைக் கெடா மாநில கல்வி இலாகா கடுமையாகக் கருதுவதாகவும் அது தெரிவித்துள்ளது.
இரு ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட இரு வெவ்வேறான சம்பவங்கள் தற்போது கெடா மாநில கல்வி இலாகாவின் விசாரணையில் இருந்து வருகிறது. மாணவர் சமுதாயத்தை உருவாக்க வேண்டிய ஆசிரியர்கள், இத்தகைய ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதை கல்வி இலாகா கடுமையாகக் கருதுவதாக அது குறிப்பிட்டுள்ளது.








