சுங்கை பட்டாணி, டிசம்பர்.04-
அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்ததாக ஓர் இந்தியப் பிரஜை, சுங்கை பட்டாணி செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
வெல்டிங் பணியாளரான 38 வயது முகமட் ஹசீன் என்ற அந்தப் பிரஜை நீதிபதி நபிஷா இப்ராஹிம் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு இந்தி மொழியில் வாசிக்கப்பட்டது.
கடந்த நவம்பர் 13 ஆம் தேதி மாலை 6.45 மணியளவில், பெடோங், ஜாலான் செமெலிங்கில் உள்ள ஒரு தொழிற்சாலையின் அலுவலகத்தில் Sig Sauer ரக கறுப்பு நிற கைத்துப்பாக்கியை வைத்திருந்ததாக அந்த இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 14 ஆண்டு சிறை மற்றும் 6 பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் 1971 ஆம் ஆண்டு சுடும் ஆயுதம் சட்டத்தின் கீழ் அந்த இந்தியப் பிரஜை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








