சபா பெர்ணம், டிசம்பர்.04-
சிலாங்கூர், சபா பெர்ணத்தில் நேற்று மாலையில் நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் போலீசார் நான்கு ஆடவர்களைக் கைது செய்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளியைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாணையில் அந்த நான்கு ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக சபா பெர்ணம் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் முகமட் யுசோஃப் அஹ்மாட் தெரிவித்தார்.
சபா பெர்ணம், பெக்கான் சுங்கை பெசார், ஜாலான் எஸ்பிபிசியில் நிகழ்ந்த இக்கைகலப்பு தொடர்பில் போலீசார் புகார் ஒன்றையும் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 148 ஆவது பிரிவின் கீழ் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக சுப்ரிண்டெண்டன் முகமட் யுசோஃப் தெரிவித்தார்.








