குவைத்தின் அனைத்துலக விமான நிலையத்தை இலக்காகக் கொண்டு நேற்று ஈரான் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலையடுத்து, அந்நாட்டிலுள்ள அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாக இருப்பதை விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மலேசிய வெளியுறவு அமைச்சு, குவைத்தில் உள்ள மலேசியத் தூதரகத்தின் மூலம் அங்குள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த தாக்குதல்கள் நேற்று ஜூன் 3-ஆம் தேதி அதிகாலை நடத்தப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
மேலும், இத்தாக்குதலைத் தொடர்ந்து குவைத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதுடன், அடுத்த அறிவிப்புகள் வரும் வரை அனைத்து வர்த்தக விமான சேவைகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், குவைத்திலுள்ள மலேசியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், மலேசியத் தூதரகம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை தொடர்ந்து பின்பற்றவும் விஸ்மா புத்ரா அறிவுறுத்தியுள்ளது.








