Jun 9, 2026
Thisaigal NewsYouTube
இந்தியா, தாய்லாந்து அதிகாரிகளின் உதவியுடன் 'கேங் டி.ஆர்' கும்பலைச் சேர்ந்த நபர் கைது
தற்போதைய செய்திகள்

இந்தியா, தாய்லாந்து அதிகாரிகளின் உதவியுடன் 'கேங் டி.ஆர்' கும்பலைச் சேர்ந்த நபர் கைது

Share:

கடந்த ஐந்து ஆண்டுகளாக சிலாங்கூரில் வன்முறைக் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் 'கேங் டி.ஆர்' கும்பலைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபருக்கு கொலை, ஆயுதக் கொள்ளை மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தி காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான குற்றச்செயல்களில் தொடர்புடைய குற்றப் பதிவுகள் உள்ளதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்துள்ளார்.

46 வயதான அந்த நபரை கைது செய்யும் நடவடிக்கையானது, இந்தியா மற்றும் தாய்லாந்து அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் இந்தியாவின் சென்னை நகரிலிருந்து தாய்லாந்தின் பாங்காக் நகருக்குச் சென்ற விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாகவும் டத்தோ எம். குமார் தெரிவித்துள்ளார்.

குற்றவியல் சட்டம் பிரிவு 130V(1)-இன் கீழ், ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று அந்நபர் மீது குற்றம் சாட்டப்படவுள்ளது.

Related News