Jun 4, 2026
Thisaigal NewsYouTube
350 ரிங்கிட் கட்டணத்தில் மலேசியாவின் புதிய கடப்பிதழ்கள் இனி 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்
தற்போதைய செய்திகள்

350 ரிங்கிட் கட்டணத்தில் மலேசியாவின் புதிய கடப்பிதழ்கள் இனி 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்

Share:

மலேசியாவில் புதிய கடப்பிதழ்கள் இனி 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் என்றும், அதற்கான கட்டணம் 350 ரிங்கிட் என்றும் அரசாங்க அரசிதழ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதன் தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் கடப்பிதழ்களைப் பெறுவதற்கு 175 ரிங்கிட் மட்டுமே செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மாற்றுத் திறனாளிகள் அட்டை வைத்திருப்பவர்களுக்கு கடப்பிதழ்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மலேசியர்களுக்கு தற்போது 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் கடப்பிதழ்களுக்கு 200 ரிங்கிட்டும், மூத்த குடிமக்களுக்கு 100 ரிங்கிட்டும் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

மேலும், சேதமடைந்த அல்லது தொலைந்துபோன கடப்பிதழ்களை மாற்றி புதிய கடப்பிதழ்கள் பெறுவதற்கான கட்டணங்களும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளன.

அதன் படி, 13 முதல் 59 வயதுக்குட்பட்ட குடிமக்கள், முதல் முறையாக, புதிய கடப்பிதழ்களைப் பெற 550 ரிங்கிட் செலுத்த வேண்டும்.

இது முன்பு அதன் கட்டணம் 400 ஆக இருந்தது என்றும் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

ஜோகூர் மாநிலத் தேர்தலுடன் ஒரே காலக்கட்டத்தில் பொதுத்தேர்தலா? அன்வார் திட்டவட்ட மறுப்பு

ஜோகூர் மாநிலத் தேர்தலுடன் ஒரே காலக்கட்டத்தில் பொதுத்தேர்தலா? அன்வார் திட்டவட்ட மறுப்பு

குவைத்தில் உள்ள அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்: விஸ்மா புத்ரா உறுதி

குவைத்தில் உள்ள அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்: விஸ்மா புத்ரா உறுதி

அதிகாரப்பூர்வ மீட்பு பணிகள் நிறைவு: ஜெஸ்லிண்டாவைத் தொடர்ந்து தேடப்போவதாக ஓராங் அஸ்லி தன்னார்வலர்கள் உறுதி

அதிகாரப்பூர்வ மீட்பு பணிகள் நிறைவு: ஜெஸ்லிண்டாவைத் தொடர்ந்து தேடப்போவதாக ஓராங் அஸ்லி தன்னார்வலர்கள் உறுதி

சபா, சரவாக்கில் 12 மணி நேரத்திற்குள் இரு நிலநடுக்கங்கள் பதிவு

சபா, சரவாக்கில் 12 மணி நேரத்திற்குள் இரு நிலநடுக்கங்கள் பதிவு

இந்தியா, தாய்லாந்து அதிகாரிகளின் உதவியுடன் 'கேங் டி.ஆர்' கும்பலைச் சேர்ந்த நபர் கைது

இந்தியா, தாய்லாந்து அதிகாரிகளின் உதவியுடன் 'கேங் டி.ஆர்' கும்பலைச் சேர்ந்த நபர் கைது

8 லட்சத்திற்கும் அதிகமான மாரா கல்விக் கடனை திருப்பி செலுத்த பெண் மற்றும் 3 உத்திரவாததாரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு

8 லட்சத்திற்கும் அதிகமான மாரா கல்விக் கடனை திருப்பி செலுத்த பெண் மற்றும் 3 உத்திரவாததாரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு