Jun 4, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் மாநிலத் தேர்தலுடன் ஒரே காலக்கட்டத்தில் பொதுத்தேர்தலா? அன்வார் திட்டவட்ட மறுப்பு
தற்போதைய செய்திகள்

ஜோகூர் மாநிலத் தேர்தலுடன் ஒரே காலக்கட்டத்தில் பொதுத்தேர்தலா? அன்வார் திட்டவட்ட மறுப்பு

Share:

ஜோகூர் சட்டமன்றம் கலைக்கப்பட்டு தற்போது புதிய மாநிலத் தேர்தலுக்குத் தயாராகி வரும் நிலையில், நாட்டை நிர்வகிக்கும் கடமைகளை நிறைவேற்றுவதிலேயே ஒற்றுமை அரசாங்கத்தின் முழு கவனமும் இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்று வரும் 'எரிசக்தி மாற்ற மாநாடு 2026' நிகழ்ச்சியின் மத்தியில் செய்தியாளர்களைச் சந்தித்த அன்வார், 16-வது பொதுத்தேர்தலானது, ஜோகூர் மாநிலத் தேர்தலுடன் ஒரே காலக்கட்டத்தில் நடத்தப்படும் வகையில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற ஊகங்களை முற்றிலும் நிராகரித்தார்.

ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது அம்மாநில அரசாங்கத்தின் முடிவு என்றும், தாங்கள் நாட்டின் நிர்வாகத்தில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

ஜோகூர் மாநில சட்டமன்றமானது கடந்த ஜுன் 1-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டதாக அம்மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபீஸ் காசி-ஆல் அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் அடுத்த 60 நாட்களுக்குள் 16-ஆவது மாநிலத் தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜோகூர் மாநிலத் தேர்தலில், மொத்தம் 56 தொகுதிகளில் போட்டியிடப்பட்ட நிலையில், பாரிசான் நேஷனல் 40 தொகுதிகளைக் கைப்பற்றி பெரும்பான்மை வெற்றியைப் பெற்றது.

அதேவேளையில், பகாதான் ஹராப்பான் 12 தொகுதிகளையும், பெரிகாத்தான் நேஷனல் 3 தொகுதிகளையும், மூடா 1 தொகுதியையும் கைப்பற்றின.

இந்நிலையில், 16-வது பொதுத் தேர்தல் முன்கூட்டியே அறிவிக்கப்படக்கூடும் என்ற அரசியல் ஊகங்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக, 2026-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மலாக்கா மற்றும் ஜோகூர் மாநிலத் தேர்தல்களுடன் ஒரே காலகட்டத்தில் நடத்தப்படலாம் என்ற பேச்சுவார்த்தைகளும் நிலவி வருகின்றன.

என்றாலும், தற்போதைய அரசியலமைப்பு காலக்கெடுவின்படி, 16 -வது பொதுத்தேர்தலை நடத்த வேண்டிய இறுதி காலவரம்பு 2028-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆகும்.

Related News

குவைத்தில் உள்ள அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்: விஸ்மா புத்ரா உறுதி

குவைத்தில் உள்ள அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்: விஸ்மா புத்ரா உறுதி

350 ரிங்கிட் கட்டணத்தில் மலேசியாவின் புதிய கடப்பிதழ்கள் இனி 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்

350 ரிங்கிட் கட்டணத்தில் மலேசியாவின் புதிய கடப்பிதழ்கள் இனி 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்

அதிகாரப்பூர்வ மீட்பு பணிகள் நிறைவு: ஜெஸ்லிண்டாவைத் தொடர்ந்து தேடப்போவதாக ஓராங் அஸ்லி தன்னார்வலர்கள் உறுதி

அதிகாரப்பூர்வ மீட்பு பணிகள் நிறைவு: ஜெஸ்லிண்டாவைத் தொடர்ந்து தேடப்போவதாக ஓராங் அஸ்லி தன்னார்வலர்கள் உறுதி

சபா, சரவாக்கில் 12 மணி நேரத்திற்குள் இரு நிலநடுக்கங்கள் பதிவு

சபா, சரவாக்கில் 12 மணி நேரத்திற்குள் இரு நிலநடுக்கங்கள் பதிவு

இந்தியா, தாய்லாந்து அதிகாரிகளின் உதவியுடன் 'கேங் டி.ஆர்' கும்பலைச் சேர்ந்த நபர் கைது

இந்தியா, தாய்லாந்து அதிகாரிகளின் உதவியுடன் 'கேங் டி.ஆர்' கும்பலைச் சேர்ந்த நபர் கைது

8 லட்சத்திற்கும் அதிகமான மாரா கல்விக் கடனை திருப்பி செலுத்த பெண் மற்றும் 3 உத்திரவாததாரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு

8 லட்சத்திற்கும் அதிகமான மாரா கல்விக் கடனை திருப்பி செலுத்த பெண் மற்றும் 3 உத்திரவாததாரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு