Jun 9, 2026
Thisaigal NewsYouTube
8 லட்சத்திற்கும் அதிகமான மாரா கல்விக் கடனை திருப்பி செலுத்த பெண் மற்றும் 3 உத்திரவாததாரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு
தற்போதைய செய்திகள்

8 லட்சத்திற்கும் அதிகமான மாரா கல்விக் கடனை திருப்பி செலுத்த பெண் மற்றும் 3 உத்திரவாததாரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு

Share:

மாரா கல்விக் கடன் 8 லட்சத்து 57 ஆயிரம் ரிங்கிட் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பெண் ஒருவரும் அவருக்கு உத்திரவாதம் அளித்த மூன்று பேரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டை சுங்கை பட்டாணி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மேல்முறையீட்டில் முன்வைக்கப்பட்ட காரணங்களில் எந்தவித நியாயமும் இல்லை என்றும், செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதித்துறை ஆணையர் தர்மஃபிக்ரி அபு ஆடம் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட எழுத்துப் பூர்வத் தீர்ப்பில், “செஷன்ஸ் நீதிமன்றத்தின் கண்டறிதல்கள் நியாயமானவை. சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தீர்ப்பில் வெளிப்படையான தவறுகள் எதுவும் காணப்படவில்லை,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, மேல்முறையீடு செய்த பெண்ணும், அவருக்கு உத்திரவாதம் வழங்கியவர்களும் 10 ஆயிரம் ரிங்கிட் நீதிமன்றச் செலவுத் தொகையையும் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related News