Sep 25, 2026
Thisaigal NewsYouTube
சபா, சரவாக்கில் 12 மணி நேரத்திற்குள் இரு நிலநடுக்கங்கள் பதிவு
தற்போதைய செய்திகள்

சபா, சரவாக்கில் 12 மணி நேரத்திற்குள் இரு நிலநடுக்கங்கள் பதிவு

Share:

சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை 12 மணி நேரத்திற்கும் குறைவான இடைவெளியில் ரிக்டர் அளவுகோலில் 2.9 அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

இதன் அதிர்வுகள் இரு மாநிலங்களிலும் பல பகுதிகளில் உணரப்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா அறிவித்துள்ளது.

முதல் நிலநடுக்கமானது காலை 10.36 மணியளவில், சபாவின் ரானாவ் பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது என்றும், இதன் அதிர்வுகள் குண்டசாங், ரானாவ் நகரம் மற்றும் கோத்தா பெலுட் பகுதிகளில் உணரப்பட்டதாகவும் மெட்மலேசியா குறிப்பிட்டுள்ளது.

அதே நாளில் இரவு 10.33 மணியளவில், சரவாக்கின் மாம்போங் பகுதியில் இரண்டாவது நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவானதாகவும், இதன் அதிர்வுகள் சமரஹான் மற்றும் செரியான் பகுதிகளில் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News