Oct 16, 2026
Thisaigal NewsYouTube

சிங்கப்பூர் பிரதமருக்கு கோவிட் – 19 கிருமித் தொற்று

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிங்கப்பூர் பிரதமருக்கு கோவிட் – 19 கிருமித் தொற்று

சிங்கப்பூர், டிச.4-


சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு கோவிட் - 19
கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமக்கு கோவிட் 19 நோய்த்தொற்று ஏற்பட்டு இருப்பது குறித்து லாரன்ஸ் வோங், நேற்று மாலை 6.52 மணியளவில் தமது முகநூலில் தெரிவித்துள்ளார்.

காலை எழுந்தபோதே தொண்டை வலி இருந்ததாக அவர் குறிப்பிட்டார். அதேவேளையில் அண்மையில் தொடர்ந்து வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு கடைசியில் நானும் கோவிட் தொற்று க்கு ஆளாகியுள்ளேன் என்று தமது பதிவில் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

தற்போது தம்மை தனிமைப்படுத்திக்கொண்டு, வீட்டிலிருந்து பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →