முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கை வீட்டுக் காவலில் வைப்பது தொடர்பாகப் புதிய உத்தரவு எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்று போலீஸ் தெரிவித்துள்ளது.
கோலாலம்பூர், செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அனுவார் பக்ரி அப்துல் சாலாம் இதனைத் தெரிவித்தார். ஜாலான் லங்காக் டூத்தாவில் உள்ள நஜிப்பின் வீட்டைச் சுற்றியுள்ள நிலைமை அமைதியாக இருப்பதாகவும், புதிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே, எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் எஞ்சியுள்ள சிறைத் தண்டனையை நஜிப் தனது வீட்டில் குடும்பத்தினருடன் வீட்டுக் காவலில் கழிப்பதற்கான உத்தரவு கிடைத்துள்ளதாக அவரது வழக்கறிஞர் டான் ஶ்ரீ முஹமட் ஷாஃபி அப்துல்லா கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தார்.








