Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பேராக் தீ விபத்தில் சிக்கி 18, 15 வயது சகோதரிகள் உயிரிழப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பேராக் தீ விபத்தில் சிக்கி 18, 15 வயது சகோதரிகள் உயிரிழப்பு

பேராக், சித்தியவான் கம்போங் கோ என்ற இடத்தில் இரண்டு வீடுகளில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில், 18 மற்றும் 15 வயதுடைய இரு சகோதரிகள் சிக்கி உயிரிழந்தனர்.

இன்று காலை 9 மணிக்குத் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக பேராக் தீயணைப்பு, மீட்புத் துறை இயக்குநர் சயானி சைடோன் தெரிவித்தார். சித்தியவான், ஶ்ரீ மஞ்சோங் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இரண்டு மாடிகளைக் கொண்ட அந்த வீடுகள் தீயில் பெரும்பாலும் அழிந்தன. மேலும், இரண்டு புரோட்டோன் சாகா கார்கள், ஒரு புரோட்டோன் பெர்டானா கார், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவையும் சேதமடைந்தன. காலை 10.30 மணிக்குத் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன், 20 தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →