Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பெட்டாலிங் ஜெயாவில் பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததாக அரசியல் கட்சியின் மூத்த தலைவர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பெட்டாலிங் ஜெயாவில் பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததாக அரசியல் கட்சியின் மூத்த தலைவர் கைது

பெட்டாலிங் ஜெயா பகுதியில் உள்ள வீடு ஒன்றில், பெண்ணுடன் தனிமையில் இருந்ததாகக் கூறப்படும் அரசியல் கட்சியின் மூத்த தலைவர் ஒருவரை சிலாங்கூர் மாநில இஸ்லாமிய சமய விவகாரத் துறையான ஜாயிஸ் (JAIS) கைது செய்துள்ளது.

44 வயதுடைய அந்த அரசியல் தலைவர் நேற்று வியாழக்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் தடுத்து வைக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

சம்பவத்தின் போது, ஜாயிஸ் அமலாக்க அதிகாரிகள் ஐந்து பேர் கொண்ட குழுவாகச் சென்று அந்த வீட்டைச் சோதனையிட்டபோது, அரசியல்வாதியும் பெண்ணும் வீட்டிற்குள் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, இருவரும் ஆவணப் பதிவுக்காக ஷா ஆலமில் உள்ள ஜாயிஸ் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதியின் பெயர் மற்றும் அவர் சார்ந்துள்ள கட்சி குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →