Oct 16, 2026
Thisaigal NewsYouTube

கேபிள் திருட்டு முயற்சி: காஜாங் எம்ஆர்டி ரயில் சேவையில் பாதிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கேபிள் திருட்டு முயற்சி: காஜாங் எம்ஆர்டி ரயில் சேவையில் பாதிப்பு

காஜாங் எம்ஆர்டி ரயில் பாதையில் கேபிள் திருட முயற்சி மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, இன்று காலை ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

ஃபிலியோ டாமான்சாரா மற்றும் பூசாட் பண்டார் டாமான்சாரா நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

அதிகாலை 5.30 மணியளவில் ரயில் பாதையில் அத்துமீறி நுழைந்து கேபிள்களைத் திருட முயற்சித்த சம்பவத்தைத் தாங்கள் கண்டறிந்ததாக ரேபிட் கேஎல் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சார விநியோகம் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டது.

இதனையடுத்து, துணை போலீசார் பாதுகாப்புச் சோதனைகளை மேற்கொண்டு சந்தேக நபரைக் கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்தில் யாரேனும் கைது செய்யப்பட்டார்களா என்பது குறித்து ரேபிட் கேஎல் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →