புகைமூட்டம் காரணமாக சிலாங்கூரில் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகள் நாளை அக்டோபர் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை மூடப்படும் என்று கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபட்லினா சீடேக் அறிவித்துள்ளார்.
கிள்ளான், கோலா சிலாங்கூர், கோலா லங்காட், உலு லங்காட், கோம்பாக், சிப்பாங், பெட்டாலிங் பெர்டானா, பெட்டாலிங் உத்தாமா ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்படும்.
அதேவேளையில், உலு சிலாங்கூர், சபாக் பெர்னாம் மாவட்டப் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும். எனினும், அங்கு வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.








