பிரதமரின் பதவிக்காலத்துக்கு வரம்பு விதிப்பது, சட்டத்துறைத் தலைவர் மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞரின் பொறுப்புகளைப் பிரிப்பது உள்ளிட்ட அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து, 273ஆவது மலாய் ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாள் மாநாடு, இஸ்தானா நெகாராவில் பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷா தலைமையில் நடைபெற்றது. இரண்டாம் நாளில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் கலந்து கொண்டார்.
மேலும், 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 97ஆவது பிரிவைத் திருத்துவது, சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், தேசியப் பாதுகாப்பு, தற்காப்பு மற்றும் பொருளாதார நிலவரம் உள்ளிட்ட விவகாரங்களும் மாநாட்டில் எடுத்துரைக்கப்பட்டன.








