சரவாக்கில் தேசிய டிஜிட்டல் வலையமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டமான ஜெண்டெலா 2 திட்டத்தின் முதல் கட்டத்தைச் செயல்படுத்த 350 இடங்களுக்கு 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
ஆறு தொகுப்புகளாகச் செயல்படுத்தப்படும் இத்திட்டத்துக்கான ஒப்புதல் கடிதங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அடுத்த சில மாதங்களில் தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கான உபகரணங்களைக் கொண்டு செல்லும் பணிகள் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், தீபகற்ப மலேசியா, சபா, சரவாக் ஆகிய பகுதிகளுக்கு இடையிலான தொடர்பை வலுப்படுத்தும் சலாம் கடலடி கேபிள் திட்டத்தின்கீழ், சரவாக்கில் குறைந்தது மூன்று கேபிள் இணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும். இத்திட்டம் 2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்கி, 2029ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.








