கெடா, குரூனில் 19 வயது இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், இரு பதின்ம வயதினர் உட்பட 14 பேர் மீது இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
முஹமட் ஹைக்கால் முஹமட் ஷாரில்னிஸாம் என்ற அந்த இளைஞர், அக்டோபர் 5ஆம் தேதி இரவு முதல் அக்டோபர் 8ஆம் தேதி காலை வரை, ஜாலான் சுங்கை பட்டாணியில் உள்ள ஒரு வீட்டில் கொலை செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோதும், கொலை வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டவை என்பதால், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.
குற்றவியல் சட்டத்தின் 302ஆவது பிரிவுடன் 34ஆவது பிரிவையும் இணைத்து அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.








