நாட்டில் புகைமூட்டம் காரணமாகப் பள்ளிகள் மூடப்படுமா என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பகாங் மற்றும் புத்ராஜெயாவில் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்கள் நாளை, அக்டோபர் 16ஆம் தேதி வழக்கம்போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், புகைமூட்டத்தின் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிப் பணியாளர்கள் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் உடல்நலம் குறித்து கவலைப்பட்டால், பள்ளிக்குத் தகவல் தெரிவித்து அவர்களை வீட்டில் வைத்திருக்கலாம்.
மேலும், காற்றுத் தரக் குறியீடு 100ஐத் தாண்டும் நிலையில் வெளிப்புற நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். பள்ளிகளை மூடுவது தொடர்பான முடிவுகள், தேசிய புகைமூட்ட நடவடிக்கைத் திட்டம் மற்றும் காற்றுத் தர அளவீடுகளின் அடிப்படையில் எடுக்கப்படும்.








