நெகிரி செம்பிலானில் உள்ள கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளும் நாளை, அக்டோபர் 16ஆம் தேதி வழக்கம்போல் செயல்படும் என்று மாநிலக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
புகைமூட்டத்தின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, பள்ளிகளை மூடுவது தொடர்பான முடிவுகள் காற்றுத் தரக் குறியீட்டு அளவையும் அப்போதைய நிலவரத்தையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றுத் தரக் குறியீடு 100ஐத் தாண்டினால், உடற்கல்வி, விளையாட்டு, புறப்பாட நடவடிக்கைகள், முகாம்கள், கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும்.
மேலும், சுவாசப் பிரச்சினை உள்ள மாணவர்கள் மற்றும் ஆபத்துக்கு உள்ளாகக்கூடியவர்கள் குறிப்பாக முகக்கவசம் அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.








