Oct 16, 2026
Thisaigal NewsYouTube

3 ஆண்டுகளில் 371 சிறுவர்கள், இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு - தீயணைப்புத் துறை கவலை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
3 ஆண்டுகளில் 371 சிறுவர்கள், இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு - தீயணைப்புத் துறை கவலை

நாட்டில் நீரில் மூழ்கி சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கவலை அளித்து வருவதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையில், நாடு முழுவதும் 371 சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறுகள், நீர்ப்பாசனக் கால்வாய்கள் மற்றும் கடற்கரைகளில் அதிகளவிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

குழந்தைகள் பெரியவர்களின் கண்காணிப்பின்றி நீர்நிலைகளில் விளையாடுவது, குளிப்பது மற்றும் நீந்துவது போன்ற செயல்களின் போது விபத்துகள் ஏற்படுவதாக அத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ நோர் ஹிஷாம் முஹமட் தெரிவித்துள்ளார்.

இதனைத் தடுக்கும் வகையில், குழந்தைகளை நீர்நிலைகளுக்கு அருகில் தனியாக விளையாட அனுமதிக்க வேண்டாம் என்றும், நீர் அமைதியாகவோ ஆழமற்றதாகவோ இருந்தாலும் ஆபத்தை அலட்சியப்படுத்தக்கூடாது என்றும் பெற்றோருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், நீர் பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்கவும், மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி வழங்கவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நீரில் மூழ்கும் உயிரிழப்புகளைத் தடுக்க பெற்றோர், பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →