Oct 17, 2026
Thisaigal NewsYouTube

நஜிப் வீட்டுக்காவல் நிபந்தனைகளை மறைக்கக் கூடாது – ஜசெக லிம் லிப் எங் வலியுறுத்தல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நஜிப் வீட்டுக்காவல் நிபந்தனைகளை மறைக்கக் கூடாது – ஜசெக லிம் லிப் எங் வலியுறுத்தல்

முன்னாள் பிரதமர் டத்ய்ஹோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கிற்கு மன்னிப்பு அடிப்படையில் வழங்கப்பட்ட வீட்டுக்காவல் உத்தரவின் நிபந்தனைகளை வெளியிடக்கூடாது எனச் சிறைத்துறை உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படும் விவகாரத்தில், ஜசெக-வைச் சேர்ந்த கெப்போங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வீட்டுக்காவல் நிபந்தனைகள் அதிகாரப்பூர்வ ரகசியம் அல்ல என்றும், அவற்றை மறைத்து வைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நஜிப்புக்கு வீட்டுக்காவல் உத்தரவும் அதற்கான நிபந்தனைகளும் கிடைத்துள்ளதாக அவரது வழக்கறிஞர் ஷாஃபி அப்துல்லா தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.

இருப்பினும், அவற்றின் விவரங்களை வெளியிடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கையை “அபத்தமானது” என வர்ணித்த லிம் லிப் எங், இதனால் நஜிப்பின் வீட்டுக்காவல் தொடர்பான ஊகங்கள் மேலும் அதிகரிக்கும் என்றும், விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை அறிந்து கொள்ள மலேசிய மக்களுக்கு உரிமை உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.

நஜிப்பை யார் சந்திக்க அனுமதி உண்டு, அவர் கைப்பேசி, இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தலாமா, தொலைக்காட்சி பார்க்கவும் விருந்தினர்களைச் சந்திக்கவும் அனுமதி உள்ளதா, மின்னணு கண்காணிப்புக் கருவி அணிய வேண்டுமா அல்லது சிசிடிவி மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுவாரா எனப் பல கேள்விகளை லிம் லிப் எங் எழுப்பியுள்ளார்.

மேலும் நஜிப் இன்னும் தண்டனைக் கைதியாகவே இருப்பதாகவும், அவர் முழுமையாக விடுதலை செய்யப்படவில்லை என்றும் சுட்டிக் காட்டிய லிம், இந்த வழக்கு பொதுநலன் சார்ந்தது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் வீட்டுக்காவல் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான முன்னுதாரணமாகவும் அமையக்கூடும் என்றார்.

எனவே, பாதுகாப்பு தொடர்பான முக்கியமான தகவல்களை ரகசியமாக வைத்திருக்கலாம் என்றாலும், அனைத்து விவரங்களையும் மறைக்கக்கூடாது எனச் சிறைத்துறையை அவர் வலியுறுத்தியுள்ளார்.

“வீட்டுக்காவல் என்பது ஆடம்பரமான பங்களாவில் விடுமுறையைக் கழிப்பதல்ல. அனைத்தும் முறையாக இருந்தால், நிபந்தனைகளைப் பொதுமக்களுக்கு வெளியிட ஏன் அஞ்ச வேண்டும்?” என்றும் லிம் லிப் எங் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →