Oct 17, 2026
Thisaigal NewsYouTube

பிறரை இழிவுபடுத்தும் தளமாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டாம்: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் எச்சரிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பிறரை இழிவுபடுத்தும் தளமாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டாம்: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் எச்சரிக்கை

சமூக ஊடகங்களைப் பிறரை இழிவுபடுத்தும் தளமாக மாற்ற வேண்டாம் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழக வேந்தருமான சுல்தான் இப்ராஹிம், ஷா ஆலாமில் இன்று நடைபெற்ற யுஐடிஎம்மின் 105-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய போது, பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கும் சுதந்திரத்துடன் இருக்கும் அதேவேளையில், சமூகப் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், சமூக ஊடகப் பயனர்கள் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் கருத்துகளைப் பகிர வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், பிறரை அவமதிப்பது, வசைபாடுவது, இழிவுபடுத்துவது அல்லது காயப்படுத்தும் வகையில் கருத்துகளைப் பதிவிடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதேவேளையில் கருத்து வேறுபாடுகள் இருப்பதால் பகைமையை வளர்க்க வேண்டிய அவசியமில்லை என்றும், ஒருவரை விமர்சிக்க விரும்பினால் ஆக்கபூர்வமாகவும், தவறுகளைச் சுட்டிக்காட்ட விரும்பினால் நிதானமாகவும் கண்ணியத்துடனும் செயல்பட வேண்டும் என்றும் மாமன்னர் தெரிவித்துள்ளார்.

சில தரப்பினர் சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்தி மற்றவர்களைத் தூண்டிவிடுவதுடன், வெறுப்பைப் பரப்பி சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்துவதாகவும் சுல்தான் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →