Oct 17, 2026
Thisaigal NewsYouTube

கல்வத் வழக்கில் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார் நிக் நஸ்மி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கல்வத் வழக்கில் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார் நிக் நஸ்மி

பெட்டாலிங் ஜெயா பகுதியில் உள்ள வீடு ஒன்றில், சிலாங்கூர் மாநில இஸ்லாமிய சமய விவகாரத் துறையான ஜாயிஸ் (Jais) நடத்திய சோதனையில், சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இருவரில் தானும் ஒருவர் என்பதை பெர்சாமா கட்சியின் இணைத் தலைவரான நிக் நஸ்மி நிக் அஹ்மாட் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவமானது, திருமணமாகாத ஆணும் பெண்ணும் நெருக்கமாக இருப்பதாகக் கருதப்படும் கல்வத் வழக்கு தொடர்பானதாகும்.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது மனைவி, குடும்பத்தினர் மற்றும் இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் நிக் நஸ்மி மன்னிப்பு கோரியுள்ளார்.

இது தனது தீர்மானத்தில் ஏற்பட்ட தவறு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தின் போது, தானும், தனது சக ஊழியரும் முதலில் கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் உள்ள தங்களது ஸ்டுடியோவில் கலந்துரையாடியதாகவும், பின்னர் திட்டம் ஒன்று தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக அந்தக் கலந்துரையாடலை பெட்டாலிங் ஜெயா பகுதிக்கு மாற்ற முடிவு செய்ததாகவும் நிக் நஸ்மி விளக்கமளித்துள்ளார்.

அதேவேளையில், தானும், அப்பெண்ணும் எந்த ஒரு தகாத செயலிலும் ஈடுபடவில்லை என்பதையும் நிக் நஸ்மி உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →