Oct 16, 2026
Thisaigal NewsYouTube

வெள்ளத்தால் வீடிழந்த இந்தியக் குடும்பத்துக்கு தீபாவளிக்கு முன் புதிய வீடு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வெள்ளத்தால் வீடிழந்த இந்தியக் குடும்பத்துக்கு தீபாவளிக்கு முன் புதிய வீடு

சிலாங்கூர் மாநில அரசின் ரூமா கெராஜாஆன் பிரிஹாத்தின் சிலாங்கூர் திட்டத்தின் கீழ், வெள்ளத்தால் வீடு முழுமையாகப் பாதிக்கப்பட்ட இந்தியக் குடும்பத்துக்கு, கோத்தா கெமுனிங் வட்டாரத்தில் இன்று புதிய வீடு கட்டி முடிக்கப்பட்டு, அதன் சாவி ஒப்படைக்கப்பட்டது.

வெள்ளத்தால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட குடும்பத்துக்கு, தீபாவளிக்கு முன்பாகப் புதிய வீடு கிடைத்திருப்பது மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளித்துள்ளது.

இந்தத் திட்டம் வெற்றியடைய ஒத்துழைப்பு வழங்கிய சிலாங்கூர் மாநில அரசு, மாவட்ட அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், உபேன் (UPEN), எம்பிஎஸ்ஏ (MBSA), இந்திய சமூகத் தலைவர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து அரசுத் துறையினருக்கும் புக்கிட் கெமுனிங் மண்டல கவுன்சிலர் யோகேஸ்வரி சாமிநாதன் நன்றி தெரிவித்தார்.

இதற்கிடையே, 2025ஆம் ஆண்டு ICU திட்டத்தின் கீழ் ஒரு வீடு கட்டி ஒப்படைக்கப்பட்ட நிலையில், 2026ஆம் ஆண்டில் மேலும் ஒரு வீடு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2027ஆம் ஆண்டுக்காக இரண்டு வீடுகளுக்கான விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →