Oct 16, 2026
Thisaigal NewsYouTube

எஸ்.பி.எம். தமிழ்மொழித் தேர்வில் இந்திய மாணவர்கள் சிறந்து விளங்கச் சிறப்புப் பயிற்சி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எஸ்.பி.எம். தமிழ்மொழித் தேர்வில் இந்திய மாணவர்கள் சிறந்து விளங்கச் சிறப்புப் பயிற்சி

பேராக் மாநிலத்தில் எஸ்.பி.எம். தமிழ்மொழித் தேர்வை எதிர்கொள்ளும் இந்திய மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தையும் கல்வித் திறனையும் மேம்படுத்த, கல்வி அமைச்சும் மித்ராவும் இணைந்து சிறப்புப் பயிற்சிப் பட்டறையை நடத்தியுள்ளன.

ஐந்து மாவட்டங்களில் நடத்தப்பட்ட இத்திட்டத்தின் இறுதிக்கட்ட நிகழ்ச்சி இன்று கிந்தா மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் 420 இந்திய மாணவர்கள் பங்கேற்றதாக பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தெரிவித்தார்.

இத்திட்டத்தைச் செயல்படுத்த ஏறத்தாழ ஒரு மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கல்வியில் பின்தங்கிய மாணவர்களையும் அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்குவது அவசியம் என்றார்.

எந்தவோர் இந்திய மாணவரும் கல்வி வாய்ப்புகளை இழந்துவிடக்கூடாது என்பதை வலியுறுத்திய அவர், மாணவர்களும் பெற்றோர்களும் அரசாங்கத்தின் கல்வி உதவித் திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, உயர்கல்வியைத் தொடர முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த பயிலரங்கில் தமிழ்மொழி தாள் ஒன்று மற்றும் இரண்டின் நுணுக்கங்களை அறியவும், மாணவர்களின் சிந்தனை வளர்ச்சிக்கும் பெரும் துணையாக இருந்தது என்று பயிலரங்கின் கிந்தா மாவட்ட செயலாளர் ஹேமாவதி குமரேசன் தெரிவித்தார்.

வட கிந்தா அளவில் நடைபெற்ற இந்த பயிலரங்கில் துணை கல்வி அமைச்சர் வோங் கா வோவின் சிறப்பு வருகையோடு அமைந்ததுடன் இந்த பயிலரங்கில் ஒட்டு மொத்த நிலையில் 1,025 மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →