Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பட்ஜெட் 2027: ‘மாஸ்கோ’ அடிப்படையில் ஆரம்பச் சம்பள வழிகாட்டுதல்கள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பட்ஜெட் 2027: ‘மாஸ்கோ’ அடிப்படையில் ஆரம்பச் சம்பள வழிகாட்டுதல்கள்

கல்வித் தகுதி, திறன் நிலைக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைப்பதை உறுதி செய்ய, ‘மாஸ்கோ’ எனப்படும் மலேசியத் தொழில் வகைப்பாட்டுத் தரநிலையின் அடிப்படையில் ஆரம்பச் சம்பள வழிகாட்டுதல்களை மனிதவள அமைச்சு தயாரித்து வருகிறது.

2027ஆம் ஆண்டு பட்ஜெட்டில் பட்டதாரிகளுக்கும் பகுதியளவு திறன் பெற்ற தொழிலாளர்களுக்கும் மாதம் 2,500 ரிங்கிட் ஆரம்ப அடிப்படைச் சம்பளக் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக, மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

இன்று புத்ராஜெயாவில் பெர்கேசோ கட்டடத்தில் நடைபெற்ற விளக்கக் கூட்டத்தில் பேசிய டத்தோ ஸ்ரீ ரமணன், சம்பள வழிகாட்டுதல்கள் 2027 ஜூன் மாதத்தில் புதிய குறைந்தபட்ச ஊதிய ஆணையுடன் வெளியிடப்படும் என்றார்.

மேலும், தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்குவதைக் கண்காணிக்க ‘இ-வேஜஸ்’ என்ற மின்னணு முறையை அறிமுகப்படுத்த அமைச்சு திட்டமிட்டு வருகிறது. சம்பளத் தாமதம், நிலுவை மற்றும் குறைந்தபட்ச ஊதியத்திற்குக் குறைவாகச் சம்பளம் வழங்குதல் போன்ற பிரச்சினைகளைக் கையாள இது உதவும்.

இதற்கிடையில், இந்தியர் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவுக்கு 150 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மோசமான நிலையில் உள்ள தமிழ்ப்பள்ளிகளைப் பராமரிக்க 50 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சிலாங்கூரில் ஆறு புதிய சிப்ஸ் தொழில்நுட்பங்கள் அறிமுகம்! 407 பொறியாளர்கள், 20 நிறுவனங்கள் பங்கேற்பு

சிலாங்கூரில் ஆறு புதிய சிப்ஸ் தொழில்நுட்பங்கள் அறிமுகம்! 407 பொறியாளர்கள், 20 நிறுவனங்கள் பங்கேற்பு

ஜப்பானுக்குப் போதைப்பொருள் கடத்தினால் தலா 8,000 ரிங்கிட்!

ஜப்பானுக்குப் போதைப்பொருள் கடத்தினால் தலா 8,000 ரிங்கிட்!

521 கிலோ சியாபு போதைப்பொருள் கடத்தல்: அரசியல்வாதியின் தொடர்பை உறுதிப்படுத்த பிலிப்பைன்ஸ் பதிலுக்குக் காத்திருக்கும் போலீஸ்

521 கிலோ சியாபு போதைப்பொருள் கடத்தல்: அரசியல்வாதியின் தொடர்பை உறுதிப்படுத்த பிலிப்பைன்ஸ் பதிலுக்குக் காத்திருக்கும் போலீஸ்

எஸ்.பி.எம். தமிழ்மொழித் தேர்வில் இந்திய மாணவர்கள் சிறந்து விளங்கச் சிறப்புப் பயிற்சி

எஸ்.பி.எம். தமிழ்மொழித் தேர்வில் இந்திய மாணவர்கள் சிறந்து விளங்கச் சிறப்புப் பயிற்சி

இந்தோனேசிய காட்டுத் தீயில் மலேசிய செம்பனை  நிறுவனங்களுக்குத் தொடர்பில்லை – அமைச்சர் ஃபாஹ்மி

இந்தோனேசிய காட்டுத் தீயில் மலேசிய செம்பனை நிறுவனங்களுக்குத் தொடர்பில்லை – அமைச்சர் ஃபாஹ்மி

ஹெலிகாப்டர் பராமரிப்பில் குறைபாடு இல்லை: இயக்குநர் நிறுவனம் விளக்கம்

ஹெலிகாப்டர் பராமரிப்பில் குறைபாடு இல்லை: இயக்குநர் நிறுவனம் விளக்கம்