Oct 16, 2026
Thisaigal NewsYouTube

இந்தோனேசிய காட்டுத் தீயில் மலேசிய செம்பனை நிறுவனங்களுக்குத் தொடர்பில்லை – அமைச்சர் ஃபாஹ்மி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இந்தோனேசிய காட்டுத் தீயில் மலேசிய செம்பனை  நிறுவனங்களுக்குத் தொடர்பில்லை – அமைச்சர் ஃபாஹ்மி

இந்தோனேசியாவில் புகைமூட்டத்திற்குக் காரணமான காட்டுத் தீச் சம்பவங்களில், அங்கு செம்பனைத் தோட்டங்களைக் கொண்ட மலேசிய நிறுவனங்கள் எதுவும் தொடர்புபடுத்தப்படவில்லை என்று தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.

மலேசிய நிறுவனங்களின் தோட்ட உரிமைப் பகுதிகளுடன் ஒப்பிட்டுச் சரிபார்த்ததில், பெரும்பாலான தீச் சம்பவங்கள் அந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான பகுதிகளுக்கு வெளியே நிகழ்ந்திருப்பது தெரியவந்ததாக அவர் கூறினார்.

இருப்பினும், கெந்திங் பிலாண்டேஷன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு தோட்டத்துக்குத் தீ பரவியதாகவும், அந்தத் தீ தோட்டத்துக்குள் உருவாகாமல் வெளிப்பகுதியிலிருந்து பரவியதாகவும் அவர் விளக்கினார்.

மலேசிய நிறுவனங்கள் எதுவும் தொடர்புப்படுத்தப்படவில்லை. அதேவேளையில் தற்போது அந்தத் தீ அணைக்கப்பட்டுவிட்டதாக, புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் ஃபாஹ்மி கூறினார்.

புகைமூட்ட விவகாரத்தில் இந்தோனேசியாவில் உள்ள மலேசிய செம்பனைத் தோட்ட நிறுவனங்களுக்கு தொடர்பு இருக்கின்றனவா என்ற கேள்விக்கு தோட்ட மற்றும் மூலத்தொழில் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் நோராய்னி அஹ்மாட் அமைச்சரவையில் தெளிவான விளக்கத்தை அளித்து இருப்பதையும் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி சுட்டிக் காட்டினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →