Jan 19, 2026
Thisaigal NewsYouTube
அனைத்துலக வழித்தடங்களுக்குச் சிறகை விரித்தது
தற்போதைய செய்திகள்

அனைத்துலக வழித்தடங்களுக்குச் சிறகை விரித்தது

Share:

மலேசிய வான் போக்குவரத்து துறையில் கால் பதித்து, உள்நாட்டுப் பயண சேவையை மட்டுமே வழங்கி வந்த தனியார் மலிவு விலை விமானக் கட்டண நிறுவனமான மைஏர்லைன், வரும் ஜுன் மாதம் முதல் அனைத்துலக வழித்தடங்களுக்குத் தனது சிறகை விரிக்கவிருக்கிறது.

இதற்கான விமான டிக்கெட் வரும் மே மாதம் தொடக்கம் இணையம் வழி விற்பனை செய்யப்படும் என்பதுடன் முதல் கட்டமாக சிங்கப்பூர், இந்தோனேசிய மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குத் தனது அனைத்துலக பயணத்தை மைஏர்லைன் தொடங்கவிருப்பதாக அதன் தலைமை செயல் முறை அதிகாரி ரேய்னர் தீயோ தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில் உள்ளூர் விமானச் சேவையை அதிகாரப்பூர்வமாக தொடங்கிய மைஏர்லைன், அதன் பயணங்கள் வெற்றிகரமாக அமைந்ததைத் தொடர்ந்து தனது சேவையை விரிவுப்படுத்தும் அடுத்த கட்ட நகர்வாக அனைத்துலக வழித்தடங்களுக்குப் பயணத்தை மேற்கொள்ளவிருப்பதாக ரேய்னர் தீயோ குறிப்பிட்டுள்ளார்.

Related News