கோலாலம்பூரில் இன்று பிற்பகல் 3 மணி முதல் 5.30 மணி வரை பெய்த கனத்த மழையினால் மாநகரில் குறைந்தது 6 முக்கிய இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
ஜாலான் அகார், பெர்டானா தாவரவியல் பூங்கா, ஜாலான் ராஜா சூலான், ,
கூச்சாய் லாமா பிளாட்ஸ், பாடாங் தெம்பாக் மற்றும் ஜாலான் தேசா ஜெயா ஆகிய பகுதிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவங்களில் பல வாகனங்கள் சேதமடைந்த போதிலும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மரங்களை அகற்றி, போக்குவரத்தைச் சீர்செய்யும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மோசமான வானிலை தொடர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








