Jul 16, 2026
Thisaigal NewsYouTube
காதலியைக் தலையணையால் அமுக்கிக் கொன்ற  இளைஞருக்கு 32 ஆண்டுகள் சிறை
தற்போதைய செய்திகள்

காதலியைக் தலையணையால் அமுக்கிக் கொன்ற இளைஞருக்கு 32 ஆண்டுகள் சிறை

Share:

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது காதலியைக் தலையணையால் முகத்தில் அமுக்கிக் கொலை செய்த 23 வயது ஆடவருக்கு கிள்ளான் உயர் நீதிமன்றம் இன்று 32 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 12 பிரம்படிகளும் விதித்தது.

அமிருல் அமீன் அமிருதீன் என்று அந்த இளைஞருக்கு எதிராக சுமத்தப்பட்ட கொலைக் குற்றச்சாட்டை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்ததை அடுத்து, நீதிபதி நோர்லிஸா ஒத்மான் இந்த தீர்ப்பை வழங்கினார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி கிள்ளான், கம்பூங் ஸ்ரீ பண்டான் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த கொடூரக் கொலை நிகழ்ந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தன்னை விட்டுப் பிரியக் கூடாது என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் ஏற்பட்ட தகராறில், நூருல் ஷாஹிரா அப்துல்லா என்ற 24 வயது காதலியின் முகத்தைத் தலையணையால் அமுக்கிக் கொன்றதாகக் குற்றவாளி ஒப்புக்கொண்டார்.

Related News