Jul 18, 2026
Thisaigal NewsYouTube
அம்னோவும், பாஸும்  ஒன்றுதான் என்றால், வாக்காளர்களுக்கு பி.ஹெச்-தான் சிறந்த தேர்வு!" – லியூ சின் தோங்
தற்போதைய செய்திகள்

அம்னோவும், பாஸும் ஒன்றுதான் என்றால், வாக்காளர்களுக்கு பி.ஹெச்-தான் சிறந்த தேர்வு!" – லியூ சின் தோங்

Share:

பாரிசான் நேஷனல் கூட்டணியை நிராகரித்து, கடந்த தேர்தல்களில் பெரிகாத்தான் நேஷனல் கூட்டணிக்கு ஆதரவளித்த வாக்காளர்கள், தற்போது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியைத் தங்களின் சிறந்த தேர்வாகக் கருதுவார்கள் என்று ஜசெக. வியூக இயக்குநர் லியூ சின் தோங் தெரிவித்துள்ளார்.

ஜோகூர் மாநிலத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் போட்டியிடாத தொகுதிகளில் அம்னோ-பாரிசான் நேஷனல் வேட்பாளர்களை ஆதரிக்குமாறு பாஸ் தனது தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அம்னோ மற்றும் பாஸ் ஆகிய இரு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது நிரூபணமாகியுள்ளதாக லியூ சின் தோங் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மலாய்-இஸ்லாமிய ஒற்றுமை என்ற போர்வையிலும், ஜசெக. கட்சியை ஒரு பூதமாகக் காட்டியும் மலாய் வாக்காளர்களின் வாக்குகளைப் பெற அம்னோவும் பாஸ்-சும் மறைமுகமாகக் கூட்டுச் சேர்ந்துள்ளதாகக் குற்றம் சாட்டிய துணை நிதி அமைச்சரான லியூ சின் தோங், கூட்டரசு அளவில் ஏற்கனவே திறம்படச் செயல்பட்டுத் தங்களை நிருபித்துள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு மக்கள் தங்களின் பேராதரவை வழங்குவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related News